சிறையில் மரணத்தின் விளிம்பில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்.. புதினுக்கு எதிராக ஆவேசமடைந்த ஜோ பைடன்!

சிறையில் இருக்கும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு உடல்நலம் பாதிக்கப்ட்டுள்ளதால் அவரை உடனயாக சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல் எழுந்துள்ளது. அலெக்சி நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எந்த நிமிடத்திலும் அவரது இதயத் துடிப்பு நிற்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அலெக்சி நவல்னிக்கு சிசிக்சை வழங்குவது குறித்து ரஷ்ய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி. இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு அலெக்சி நவல்னிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நவல்னியை கொல்ல உணவில் விஷம் வைத்து விட்டதாக ரஷ்ய அரசு மீது குற்றச்சாட்டுகள் வந்தன. இதற்கு மத்தியில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்த நவல்னி இந்த ஆண்டு ஜனவரி ரஷ்யா திரும்பினார்.

இதற்காகவே காத்திருந்த புதின் அரசு, நவல்னி மீதுள்ள பழைய வழக்களை தூசி தட்டி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அலெக்சி நவல்னியை விடுவிக்க கோரி அந்நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில் சிறையில் இருக்கும் அலெக்சி நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எந்த நிமிடத்திலும் அவரது இதயத் துடிப்பு நிற்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததால் அவரது கால்கள் மற்றும் கைகளில் உணர்வின்மை ஏற்பட்டுள்ளது.

இதனால் அலெக்சி நவல்னியை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ரஷ்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அலெக்சி நவல்னியை உடனயாக சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து அவருக்கு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல் எழுந்துளளது.

நவல்னிக்கு சிகிச்சையை வழங்க வலியுறுத்தப்பட்டு வரும் சர்வதேச போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் குரல் கொடுத்துள்ளார். . அலெக்சி நவல்னி இருக்கும் நிலைமைக்கு ரஷ்ய அரசு நடந்து கொள்ளும் விதம் முற்றிலும் நியாயமற்றது என்று ஜோ பைடன்! கூறியுளளார். ஆனால் அலெக்சி நவல்னிக்கு சிசிக்சை வழங்குவது குறித்து ரஷ்ய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை.

Contact Us