கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட கல்லூரி மாணவி இவதான்!

புதுச்சேரி சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த ராமன் என்பவரது மகள் ராஜ ஸ்ரீ. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு பொறையூர்பேட் பகுதியை சேர்ந்த பிரித்விஷ் என்ற தனது காதலனுடன் பைக்கில் சென்றுள்ளார். இதில் கஞ்சா பழக்கம் கொண்ட பிரித்விஷ் தனது சக நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அந்த மாணவியை துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் அவளை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டு பகுதியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில் வழக்கறிஞரை சந்தித்து தங்களுக்கு அவர்கள் முன்ஜாமீன் கேட்ட போது உண்மை தெரியவந்தது. இதனை அறிந்த வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று தேடியதில் 3 மனி நேரத்திற்கு பிறகு பிணத்தை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்கக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதில் இறந்தது ராஜ ஸ்ரீ என்பதை உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து குற்றம் செய்த 3 பேரை போலீசார் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர். இது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Contact Us