என்னங்க, பென்சிலை காணோம்ன்னு சொல்றது போல இருக்கு’… ’53 வீரர்களின் கதி என்ன’?… அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

53 வீரர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்காதது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Indonesia\'s Navy searching for missing submarine with 53 on board

இதையடுத்து காணாமல் போன நீர்மூழ்கியின் பெயர் கேஆர்ஐ நாங்கலா 402. அக்கப்பலைக் கண்டுபிடிக்கப் போர்க் கப்பல்களை அனுப்பி இருப்பதாக இந்தோனேசியாவின் ராணுவத் தளபதி கூறியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிடமும் கேஆர்ஐ நாங்கலா 402 கப்பலின் தேடுதல் பணிக்கு உதவி கேட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Indonesia's Navy searching for missing submarine with 53 on board

அந்நாடுகள் இந்தோனேசிய நீர் மூழ்கிக் கப்பல் குறித்தோ அக்கப்பலின் தேடுதல் பணிகள் குறித்தோ பொதுவெளியில் எதையும் குறிப்பிடவில்லை. இதனிடையே இந்தோனேசியாவின் பாலி தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், புதன்கிழமை அதிகாலை அந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.

Indonesia's Navy searching for missing submarine with 53 on board

இந்தோனேசியா வைத்திருக்கும் 5 நீர் மூழ்கிக் கப்பல்களில் இதுவும் ஒன்று ஆகும். வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தோனேசியாவின் ஒரு நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போயிருக்கிறது என இந்தோனேசியக் கப்பல் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Indonesia's Navy searching for missing submarine with 53 on board

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு அர்ஜெண்டினா பாதுகாப்புப் படையின் நீர் மூழ்கிக் கப்பல் 44 வீரர்களுடன் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் காணாமல் போனது. கிட்டத்தட்ட ஓராண்டுக் காலத்துக்குப் பிறகு, காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கிடைத்தன. அதன் பின், அந்த கப்பல் அழிந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Contact Us