பல இந்திய விமானங்கள் தரையில்- எங்கும் பறக்க முடியாத நிலையில் திண்டாட்டம் !

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகள் விமான போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளன. இதேவேளை டுபாய் தொடக்கம் மேலும் பல நாடுகள் இந்தியாவுக்கு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து பல நூறு விமானங்கள் தரையில் உள்ளது.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த 10 நாட்களுக்கு, இந்தியாவில் இருந்து, துபாய் வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, துபாய் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போல, இந்தியா வழியாக துபாய் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய் குடியுரிமை பெற்றவர்கள், அரசுமுறை பயணமாக வருபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் வழக்கம் போல வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடாவும் தடை விதித்துள்ளது.

Contact Us