அவரோட அந்த ‘தில்லுக்கு’ தான் இந்த அன்பளிப்பு…! சொன்னபடியே செய்த ‘ஜாவா’ நிறுவனம்…! – என்ன மாடல் பைக் தெரியுமா…?

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அன்று வாங்கினி ரயில் நிலையத்தில் கண் தெரியாத பெண் ஒருவர் அழைத்துச் சென்ற குழந்தை திடீரென ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. சிறிது தொலைவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

Jawa presents forty two Bullet to Railway Mayur Shelke

கொஞ்சம் கூட வெயிட் பண்ணாமல் உடனடியாக ரெயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே வேகமாக ஓடிச்சென்று அந்தக் குழந்தையைக் வெளியேற்றினார். ஒரு சின்ன இடைவெளியில் ரயிலில் இருந்து அவரையும் காப்பாற்றிக் கொண்டார்.

இது நடந்த சிசிடிவி காட்சிகள் ஏப்ரல் 20-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பலரும் மயூர் ஷெல்கேவின் இந்த சாகசத்தை வெகுவாக அனைவரும் பாராட்டினர்.

மத்திய ரயில்வேதுறை  அமைச்சர் பியூஷ்கோயலும் அவர் பணியின் மீது காட்டிய அக்கறை வியக்க வைப்பதாக பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்த அவர் பணியாற்றும் ரயில்வே சார்பில் ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு ஷெல்கே கவுரவிக்கப்பட்டார். அந்த 50 ஆயிரம் ரூபாயில் பாதித்தொகையை தண்டவாளத்தில் விழுந்து காப்பாற்றிய குழந்தையின் குடும்பத்துக்கு வழங்கினார். இதன் மூலம் அவர் மேல் மதிப்பு மேலும் பல மடங்கானது.

இந்த நிலையில், மயூர் ஷெல்கேவின் சாகச செயலைப் பாராட்டி ஜாவா நிறுவனம் பைக் பரிசளிப்பதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்தது. அதேபோல் தற்போது  புல்லட் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளது. ஜாவாவின் 42 புல்லட்டை பரிசாக கொடுத்துள்ள அந்த நிறுவனம், மயூர் ஷெல்கேவின் தைரியத்தைக் கண்டு ஜாவா நிறுவனம் பெருமை கொள்வதாகவும், அவரின் தைரியத்துக்கும் அர்ப்பணிப்பிற்கும் தான் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் செய்த காரியத்திற்கு தலைவணங்குவதாகவும், அவரின் பெருமை மிகு செயலுக்கு பாராட்டுவதில் பெருமை அடைவதாக தெரிவித்துள்ளனர். நொடிப் பொழுது தாமதித்து இருந்தால் கூட குழந்தையின் உயிரை காப்பாற்றியிருப்பது கடினம் என்ற சூழலில் மயூர் ஷெல்கே செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை இந்திய ரயில்வே துறையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us