சரக்கு கிடைக்காததால் விபரீதம்… போதைக்கு ஆசைப்பட்டு 7 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மே 1ம் தேதி காலை 7 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

இந்நிலையில், யாவத்மால் மாவட்டம் வானியில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால், மது பிரியர்கள் சிலர் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசரை போதைக்காக குடித்துள்ளனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த 7 பேரும் தொழிலாளர்கள் என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Contact Us