வல்வெட்டித்துறையில் கடற்புலிகளினுடையது என நம்பப்படும் ஆயுத தொகுதி மீட்பு! (Photos)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருள்கள் பொலிகண்டியில் மீட்கப்பட்டுள்ளன என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை பொலிகண்டி புதுவளவு என்ற இடத்திலேயே இந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடிபொருள்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படதா நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – பொலிகண்டி பிரதேசத்தில் மண்ணில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்புலிகளினுடையது என நம்பப்படும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை – பொலிகண்டி பிரதேசத்தில் உள்ள நிலப்பகுதியில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Contact Us