3 துண்டுகளாக வெடித்து சிதறியுள்ள சப்-மெரீன் கப்பல்- 53 பேரும் கடலிலேயே சாவு …

இந்தோனேசியாவுக்கு சொந்தமான கடல்படை நீர்மூழ்கிக் கப்பல், 53 படையினருடன் காணமல் போய் இருந்தது. இதனை தேடும் பணி கைவிடப்படும் நிலைக்குச் சென்றது. கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட கப்பல் தொடர்பாக பல செய்திகள் வெளியாகிய நிலையில். தற்போது பாலி நாட்டுக் கடலில் அது மூன்று துண்டுகளாக உடைந்து, கடலுக்கு அடியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது எப்படி நடந்தது ..

என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் சினிமா படங்களில் வரும் பாணியில் ஏதோ ராட்சச மிருகம் தாக்கியது போல, மூன்று துண்டுகளாக அது உடைந்து இருப்பது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. வேறு நாடுகளின் தாக்குதலுக்கு இந்தக் கப்பல் உள்ளானதா ? இல்லை கப்பலுக்குள் ஏதாவது வெடிப்பு தற்செயலாக ஏற்ப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஆனால் அதில் பணியாற்றிய 53 படை வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அரசு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

Contact Us