திடீரென வந்து துளைத்த துண்டு… அவசரமாக உயிரை காக்க சென்ற நபர் ஸ்தலத்திலேயே இறந்தார் !

அவசர அழைப்பு ஒன்று கிடைத்ததை அடுத்து. அன் நபரை காப்பாற்ற அம்பூலன்ஸ் வண்டி ஒன்று விரைந்து சென்று கொண்டு இருந்துள்ளது. இன் நிலையில் அதில் வாகன ஓட்டுனர் மற்றும் முதலுதவி செய்யும் நபர் என 2 பேர் பயணித்தவேளை. திடீரென மர்மான துண்டு ஒன்று, முதலுதவியாளர் பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வந்து அவரை தாக்கியுள்ளது. அம்பூலன்ஸ் ஓட்டுனரும் ஒரு மருத்துவர் தான்… அவர் எவ்வளவோ போராடியும்…

அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதியாக அம்பூலன்ஸ் கண்ணாடியை துளைத்துக் கொண்டு வேகமாக வந்தது, ஒரு கல் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் காரை செலுத்தும் போது. சில வேளைகளில் சிறிய கல் துண்டுகள் எமது கார் கண்ணாடிகளை தாக்குவது வழக்கம். ஆனால் குறித்த கல் சற்று பெரியது என்றும். இந்தக் கல் லாரி போன்ற பெரிய பார ஊர்திகளின் சில்லில் பட்டு பின் நோக்கி தெறித்து வரும் போது மிகவும் வேகமாக வரும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் நாமும் அந்தக் கல்லை நோக்கி வேகமாக பயணிப்போம்.

இதனால் அந்தக் கல் எம்மை தாக்கும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும். இவ்வாறான ஆபத்தை தவிர்க்க, நாம் கன ரக வாகனங்கள் பின்னால் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

Contact Us