இலங்கை தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன்‘’ படப்பிடிப்பு தள புகைப்படம் வைரல்

பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டுள்ளது. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் ரீமேக் செய்யப்பட அதை கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். நடிகர்கள் மனோபாலா, யோகிபாபு,கேஎஸ் ரவிக்குமார்,லாஸ்லியா உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் நடித்து வர இப்பொழுது படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் வெற்றி மகுடம் சூடுவார் என பலரும் நினைத்துக் கொண்டிருக்க மிகப்பெரிய ட்விஸ்ட்டாக இறுதிப் போட்டிக்கு சில வாரத்திற்கு முன்பாகவே வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கமல்ஹாசன் மேடையிலேயே தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷன் நடிப்பார் என்ற வாக்குறுதி அளித்திருந்தார். இவ்வாறு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருந்த இவர் இப்பொழுது பிரபல மலையாள திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்து வருகிறார்.

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தர்ஷனுக்கு அப்பாவாக இந்த படத்தில் நடித்து வர ஒரு ரோபோவுக்கும் முதியவருக்கும் இடையே நடக்கும் பாசப்பிணைப்பை எடுத்துரைக்கும் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் இதில் மனோபாலா, யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.

இந்த படத்தின் பூஜை படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் இப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் நரைத்த தாடியுடன் வயதான தோற்றத்தில் ரவிக்குமார் மற்றும் தர்ஷன், மனோபாலா, யோகிபாபு ஆகியோர் ஒன்றாக படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Contact Us