ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? முன்பு போலீசார் குவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து, அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

காலை 9.15 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்படவுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவுள்ளது. இந்த சூழலில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Contact Us