இரண்டாவது திருமணம் செய்த தமிழன் சடலமாக; ஈழத்தில் நடந்த மர்மம்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள ஹிஜ்ரா ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்தே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 38 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரின் முதல் மனைவி சுகயீனம் காரணமாக உயிரிழந்ததன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஒரு பெண் குழந்தையொன்று உள்ளதாகவும் முதல் மனைவியின் வீட்டியிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவர் தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் நிறைவேற்று முகாமையாளராக கடமையாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Contact Us