விஜய், அமலாபால் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய தனுஷ்.. ரகசிய வெளிநாட்டு பயணத்தால் வந்த வினை!

இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் ஆசை ஆசையை காதலித்து திருமணம் செய்து கொண்டு அடுத்த ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட சம்பவம் தற்போது வரை கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இயக்குநர் விஜய் தயாரிப்பாளர் தேனப்பன் என்பவரின் மகன். விஜய் மற்றும் அமலாபால் இடையே விவாகரத்து நடைபெறுவதற்கு காரணம் தனுஷ் தான் என முதலில் சொன்னதே தேனப்பன் தான்.

மொட்டையாக தனுஷ் தான் காரணம் என்று சொன்னாரே தவிர இருவருக்கும் எதனால் பிரச்சினை வந்தது என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

இயக்குனர் விஜய் முதலில் திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று சம்மதம் வாங்கிக் கொண்டுதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் சினிமா வட்டாரங்களில் உள்ள நட்பினால் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தொடர்ந்து விஜய்யிடம் கூறிவந்துள்ளார் அமலாபால்.

இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில்தான் அமலாபாலுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக தனுஷ் உள்ளே நுழைந்துள்ளார். அடிக்கடி அமலாபாலை கூட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு விடுமுறையை கழிக்க சென்று விடுவாராம்.

பிரச்சனையில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தால் மனது நன்றாக இருக்கும் எனக் கூறி கூட்டிச் செல்வாராம் தனுஷ். இதுவும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து கசிந்த செய்திதான். ஒருகட்டத்தில் தனுஷ் உடனான பேச்சுவார்த்தையை நிறுத்த சொல்லி அமலாபாலிடம் கடுமையாக நடந்து கொண்ட விஜய்யை உடனடியாக விவாகரத்து செய்துவிட்டார் அமலாபால்.

அதனை அதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சில படங்களிலும், தனுஷுக்கு ஜோடியாக விஐபி-2 என்ற படத்திலும் நடித்திருந்தார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் vip2 படத்தையே அமலாபாலுக்காகத் தான் எடுத்தாராம் என கோலிவுட்டில் பேச்சுக்கள் உள்ளன. இப்படி அன்பாக அரவணைத்த மனுசனை விஜய் தவறாக நினைத்துக் கொண்டு அமலாபாலை விவாகரத்து செய்துவிட்டாரே என கூறி கிண்டல் செய்கின்றனர்.

 

Contact Us