2019ல் இருந்து கொரோனாவில் அவதியுற்று உயிர்வாழும் மனிதர் இவர் தான்: 1 வருடத்திற்கு மேலாக ICUல்

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியை சேர்ந்த 49 வயதாகும் ஜேசன் என்னும் நபர், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவர் நிலை மோசமடைய, அவரை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். அன்று முதல் இன்றுவரை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அவரது நுரையீரல் முற்றாக அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. செயற்கை சுவாசம் மூலமே அவர் இன்றுவரை உயிர் வாழ்கிறார்.

அவருக்கு இறந்த நபர் ஒருவரின் நுரையீரலை பொருத்த உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. படுத்த படுக்கையாக இது நாள் வரை இருந்த ஜேசன், தற்போது தான் எழுந்து உட்கார ஆரம்பித்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 1 வருடமாக சிகிச்சை பெற்று வரும் அதிசய நபராக இவர் இருக்கிறார் என்பது தான் ஆச்சரியமான விடையம் ஆகும்.

Contact Us