லண்டனில் ஐ-போன் வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா 750 பவுண்டுகள் காசு கிடைக்கும் அதிஷ்டம் !

பிரித்தானியாவில் ஆப்பிள் ஐ-போன் பாவிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா 750 பவுண்டுகளை நஷ்ட ஈடாக கூகுள் நிறுவனம் வழங்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? பிரித்தானியாவில் ஐ-போன் பாவிக்கும் பலரது தகவல்களை கூகுள் நிறுவனம் ரகசியமாக திரட்டியுள்ளது. இதனை அடுத்து தொடுக்கப்பட்ட வழக்கில் 3 பில்லியன்( மில்லியன் அல்ல பில்லியன்) பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்பை வழங்கிய நிலையில். கூகுள் நிறுவனம் அதனை எதிர்த்து…

பிரித்தானிய உச்ச நீதிமன்றில் வழக்கை தொடுத்துள்ளது. குறித்த இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில். இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் தோற்றுப் போனால். ஐ போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தலா 750 பவுண்டுகளை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு அது தள்ளப்பட உள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. Source GOV: iPhone users could get £750 payouts each from Google over secret tracking claims

Contact Us