ரொம்ப அர்ஜென்டா தேவைப்பட்டுச்சு…’ அவசரத்துல போன என்ன நம்ப வச்சு சீட் பண்ணிட்டாங்க…’ இதுல கூடவா இப்படி ஏமாத்துவாங்க…? – கலங்கிய பெண்மணி…!

டெல்லியின் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த தனது சொந்தக்காரர் ஒருவருக்கு வழங்குவதற்காக பிந்தாப்பூர் பகுதியில் வசித்து வரும் கீதோ அரோரா என்ற பெண்மணி ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

cheating a woman by sell fire extinguisher oxygen cylinder.

இந்தியாவில் கொரோனா சுனாமி போல் பரவி வரும் சூழலில், ஆக்சிஜன் சிலிண்டர் தேவையும் கடுமையாக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்எங்கும் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவியுள்ளது.

இந்த நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் என விற்ற இருவர் மோசடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதுகுறித்து அரோரா அளித்துள்ள புகாரில், ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி தீயணைப்பு கருவியை விற்பனை செய்து என்னை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார்கள் என தெரிவித்தார்.

cheating a woman by sell fire extinguisher oxygen cylinder.

உடனடியாக இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு 2இருவரை கைது செய்துள்ளனர்.  அந்த இரண்டு பேரும் விகாஸ் புரி பகுதியை சேர்ந்த அஷுதோஷ் மற்றும் ஆயுஷ் என தெரிய வந்துள்ளது.  அவர்களிடம் இருந்து 5 தீயணைப்பு கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.  தொடர்ந்து வேறு எவரையேனும் இதுபோன்று ஏமாற்றியுள்ளார்களா? இது வரை எத்தனை பேரை இப்படி ஏமாற்றி உள்ளார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Contact Us