பச்சைக்கொடி காட்டினார் மஹிந்த.. வெளியில் வருகிறார் ரிஷாட்..

கைதாகி விசாரிக்கப்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தால் அவரை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இவ்வறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே 04 , 05ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய முற்பகல் 9.30 மணிக்கு ரிஷாட்டை நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us