நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கு…!’.. ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன ‘பிரபல’ முன்னணி நடிகர்.. ‘செம’ வைரல்..!

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Actor Dhanush wishes Udhayanidhi Stalin for winning election

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக 158 தொகுதிகளிலும், அதிமுக 75 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதில் பெரும்பான்மைக்கான 118 இடங்களை விட அதிகமான இடங்களில் திமுக முன்னிலை வகிப்பதால், அக்கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Actor Dhanush wishes Udhayanidhi Stalin for winning election

அதேபோல் மு.க.ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் கண்டார். சென்னையின் விஐபி தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்த நிலையில் நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை விட 69,355 வாக்குகள் அதிகமாக பெற்று உதயநிதி ஸ்டாலின் மாபெரும் வெற்றி பெற்றார்.

Actor Dhanush wishes Udhayanidhi Stalin for winning election

இதனை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திந்த உதயநிதி, தேர்தல் வெற்றிக்காக எய்ம்ஸ் என பதிக்கப்பட்ட செங்கலை பரிசாக கொடுத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது இதேபோல் எய்ம்ஸ் என பதித்த செங்கலை காண்பித்து அதிமுகவை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அது அப்போது பெரிய அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush wishes Udhayanidhi Stalin for winning election

இந்த நிலையில் முதல்முறையாக தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Actor Dhanush wishes Udhayanidhi Stalin for winning election

அதில், ‘முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்’ என தனுஷ் பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘தனிப்பெரும் வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். மக்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்’ என நடிகர் தனுஷ் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் விஷாலும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us