கட்சியே நாசம்; டெபாசிட் இழந்தார் பிரேமலதா விஜயகாந்த்!

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார்.

விருத்தாசலம் தொகுதியில் டெபாசிட் இழந்தார் பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் இருந்தார்.

இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாமக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

விருத்தாசலத்தில் மொத்தம் 1,94,723 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. பதிவான ஓட்டுகளில், 6 ஒரு பங்கு ஓட்டு பெற்றால் டெபாசிட் பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதன்படி, பிரேமலதா 32 ஆயிரத்து 788 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் 25,908 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் அங்கு டெபாசிட் இழந்தார்.

Contact Us