படுபயங்கரமான தோல்வியை சந்தித்த தலைவர்கள் யார் யார் தெரியுமா ?

தமிழக சட்டசபை தேர்தலில் சமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சிகளை விட குறைவான வாக்குகளை பெற்று தேமுதிக கட்சி பெரிய சரிவை சந்தித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன. ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் தனியாக 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஒரு இடங்களில் கூட வெல்லாமல் தேமுதிக தோல்வி அடைந்துள்ளது.

இந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக அதிக இடங்களை கேட்டு, அதிமுகவோடு சண்டைபோட்டு கூட்டணியில் இருந்து வெளியேறியது. எங்களுக்கு அதிக வாக்கு வங்கி இருக்கிறது, எங்களின் பலத்தை நிரூபிப்போம், நாங்கள் இல்லாமல் அதிமுக வெற்றிபெறாது என்று சவால்விட்டு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

அமமுக கூட்டணியிலும் கூட தேமுதிக கடும் பேரத்திற்கு பின் 60 இடங்களை பெற்றது. அதிலும் 2011ல் தேமுதிக வென்ற 29 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தேமுதிக மீண்டும் போட்டியிட்டது. தனது சக்தியை மீறிய தேமுதிக 60 இடங்களில் களமிறங்கியது. அதன்படியே தேமுதிக போட்டியிட்ட 60 இடங்களிலும் டெபாசிட்டை இழந்துள்ளது. தேமுதிக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மோசமான தோல்வியை அந்த கட்சி சந்தித்து இருக்கிறது.

விருத்தாசலத்தில் போட்டியிட்ட பிரேமலதா தொடங்கி எல்லோரும் டெபாசிட்டை இழந்துள்ளனர். அந்த கட்சியின் மொத்த வாக்கு சதவிகிதம் வெறும் 0.43% மட்டுமே. இதுவரை குறைந்தது 1௨.5% வாக்கு சதவிகிதத்தையாவது வைத்து இருந்த தேமுதிக இந்த முறை அந்த வாக்குகளை கூட வெல்லாமல் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

Contact Us