இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லங்க…! ‘ஐபிஎல் வீரர்கள் பஸ்ஸில் போறப்போ…’ ‘உண்மையாவே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதா…? ‘வைரலான வீடியோ…’ – விளக்கம் அளித்துள்ள போலீசார்…!

ஐ.பி.எல் பேருந்து செல்வதற்காக சாலையில் செல்லும் ஆம்புலன்ஸை சிக்னலில் நிறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ambulance stopping signal go road to board an IPL bus

இந்தியாவில் கொரோனா பரவலையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று குஜராத்தின், அகமதாபாத்தில் உள்ள பஞ்ச்ராபோல் கிராஸ்ரோட்ஸ் போக்குவரத்து சிக்னலில், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் செல்லும் சொகுசு பேருந்து அந்த சாலையை கடந்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 3 பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிக்னலை கடந்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை சிக்னலில் நின்றிருந்த மற்றொருவர் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த, அகமதாபாத் போக்குவரத்து போலீசார், ‘நாங்கள் வீடியோவைப் பார்த்தோம்,இந்த குறிப்பிட்ட சிக்னலில் வாகனங்கள் செல்வதை போக்குவரத்து காவல்துறை அல்லது அகமதாபாத் காவல்துறை நிறுத்தியதா என்பதை இன்னும் சரிபார்க்கவில்லை. இருப்பினும், ஐபிஎல் வீரர்களோ அல்லது எந்தவொரு அமைச்சர் மற்றும் விஐபி காவலர்களாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் செல்வதை காவல்துறை ஒருபோதும் நிறுத்தாது. அதனால், போலீசாரின் நற்செயல்களை களங்கப்படுத்துவதற்காக இந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

 

Contact Us