பிரபல கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி மரணம்!.. சோகத்தில் மூழ்கியது கிரிக்கெட் உலகம்!

ரஞ்சி கோப்பைத் தொடரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற காரணமாக இருந்த வீரரின் மரணம் கிரிக்கெட் உலகை கலங்கடித்துள்ளது.

ranji trophy rajasthan player vivek yadav passes away covid

2021 ஐபிஎல் சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இந்த சீசனில் இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இன்னும் 31 போட்டிகள் வரை மீதம் இருக்கிறது. இதனால் மீதமுள்ள போட்டிகளை எல்லாம் எப்போது, எங்கு நடத்தப்படும் என்று கேள்வி எழுந்தது. இவ்வாறு ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் அவசர கூட்டத்தை நடத்தி உடனடியாக ஐபிஎல் தொடரை நிறுத்த முடிவு செய்தனர்.

ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஸ்டாப்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயலஸ் அணிக்காக ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடிய விவேக் யாதவ் நேற்று கொரோனாவால் மருவத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 36 வயதான இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி யாதவ் நேற்று காலமானார். இதனை இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வருத்ததுடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விவேக் யாதவ் 18 முதல்தர போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us