தமிழர்களின் கையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்.. பின்னணி என்ன.. எப்படி வந்தது!

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள், வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலை விரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தபோது அவர்கள் வலையில் பெரிய ராக்கெட் லாஞ்சர் சிக்கியுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us