லண்டன் மேயர் சாதிக் கான் மீண்டும் வெற்றி- 2லட்சம் வோட்டுகள் வித்தியாசத்தில் வென்றார் !

லண்டனில் நடைபெற்ற மேயர் தேர்தலில், சாதிக் கான் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். பிரித்தானியாவில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல்களில்,  பல இடங்களில் லேபர் கட்சி பின்னடைவை சந்தித்து இருந்தாலும். லண்டனை பொறுத்தவரை சாதிக் கானை எதிர்த்துப் போட்டியிட்ட கான்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான ஷவூன் பெயிலையை விட சாதிக் கான் சுமார் 2 லட்சத்தி 20,00 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். ஆனால் இது கடந்த தேர்தலை உற்று நோக்கும் போது சாதிக் கானின் செல்வாக்கு சரிந்துள்ளதை காட்டுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது வெற்றி பெற்றுள்ள சாதிக் கான் தெரிவிக்கையில், பொறிஸ் ஜோன்சன் அரசுடன் தாம் இணக்கப்பாட்டோடு செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆழும் கட்சி கொண்டு வரும் பல திட்டங்களை மேயராக உள்ள சிதிக் கான் முன்னர் பல தடவை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. இதனால் அரசுக்கும் மேயருக்கு பல இழு பறி நிலை காணப்பட்டு வந்தது. அதே நிலை இம் முறை தொடராமல் இருக்க தான் முயல்வதாக சாதிக் கான் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us