பிரிட்டன் மகாரானி மீண்டும் சர்சையில் சிக்கினர்- இம் முறை ரஷ்ய அதிபர் புட்டினோடு தான் …

பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல், தொழிலதிபர்களை ரஷ்ய அதிபருக்கு அறிமுகம் செய்துவைக்கும் நடை முறை ஒன்றை கையாண்டு வந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட பிரித்தானிய ஊடகம் ஒன்று. அவரை வேறு ஒரு தொழில் அதிபர் அணுகுவது போல அணுகி, தமக்கான சேவையை செய்து தருமாறு கேட்க்கவே. இளவரசர் புரியாமல் இந்த விடையத்தில் மாட்டிக் கொண்டார். அவர் பெரும் பணத்தை பெற்றுக் கொண்டு இந்த காரியங்களில் ஈடு பட்ட விடையம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளவரசர் மைக்கேல் நன்றாக ரஷ்ய மொழி பேச வல்லவர். இதனால் மகாராணியாரின் அறிவிக்கப்படாத ரஷ்ய தூதுவராக அவரே இருந்து வந்துள்ளார். இன் நிலையில் தான்…

பிரிட்டன் இளவரசர் மைக்கேல், ரஷ்ய அதிபரின் நெருங்கிய வட்டாரங்களுக்கு தென்கொரிய தொழில் அதிபர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.இந்நிலையில் ஒரு தொழிலதிபரிடம், அதிபர் அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதற்காக சுமார் 50 ஆயிரம் பவுண்டுகள் இளவரசர் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தொழிலதிபருக்கு ரஷ்யாவில் ஆலோசகராக பணியாற்றுவதற்கு ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் பவுண்டுகள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் ரஷ்ய மொழியில், அந்த தொழிலதிபரின் சார்பாக உரையாற்றுவதற்கு சுமார் 1,43,000 பவுண்டுகள் பெற்றிருக்கின்றனர். இதனை வெளிப்படுத்த நினைத்த ஒரு பத்திரிக்கை, தொழிலதிபராக இளவரசரிடம் காட்டிக்கொண்டு ஒரு உரை தயார் செய்து தருமாறு கேட்டிருக்கிறது. இதனை நம்பிய இளவரசர் மைக்கேல், கென்சிங்டன் அரண்மனை ரஷ்ய மொழியில் உரையை பதிவு செய்து தர சம்மதித்துள்ளார். பின்னர் இதற்கான காசை அறவிடச் சென்றவேளை மாட்டிக் கொண்டார்.

இச்சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பில் இளவரசரின் அலுவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் இளவரசர் மைக்கேலுக்கு ஜனாதிபதியுடன்(புட்டின்) சிறப்பான உறவு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

Contact Us