15ம் திகதி பணம் வரும்- தலா 4,000 ரூபா அறிவித்து மேலும் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்

தி.மு.க தேர்தல் வாக்குறுதியாக, குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்துக் குடும்பத்தினருக்கும் தலா 4,000 தருவேன் என்று ஸ்டாலின் அறிவித்து இருந்தார். தற்போது தி.மு.க வெற்றியடைந்து அவரே முதல்வர் ஆகியுள்ள நிலையில். அதனை உடனே நிறைவேற்றி வருகிறார். இதனால் மக்களிடையே அவர் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. அது போக வழமையாக ஆட்சிக்கு வரும் கட்சி, பழைய ஆட்சியில் இருந்த பல திட்டங்களை நிறுத்தி தமது புது திட்டங்களை கொண்டுவருவது வழக்கம். அந்த வகையில் அம்மா உணவங்களை தி.மு.க அகற்றும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் அதனை ஸ்டாலின் செய்யவில்லை. மாறாக …

அங்கே சென்று சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுகவிலும் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அம்மா உணவகத்தை அடித்து நொருக்கி திமுக உறுப்பினர் ஒருவரை உடனடியாக ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கியதும். அறிவிப்பு பலகையை மீண்டும் பொருத்த உடனே உதவிய விடையங்கள், அவர் மேல் மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தி உள்ளது. முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதனைத்தொடர்ந்து நியாய விலை கடை ஊழியர்கள் இன்று முதல் டோக்கன்கள் வழங்கும் பணியை துவங்கி இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் திருநகரில் அவர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியபோது 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக கொடுத்தது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் எல்லோரும் தெரிவிக்கிறோம். இரண்டாவதாக எங்களைவிட கீழ்தட்டு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோன்று வருங்காலத்தில் அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். ரேஷன் கடை அதிகாரிகள் கொடுக்கும் பொழுது எங்களுக்கு மனம் திருப்தியாக இருக்கின்றது. என்று தெரிவித்துள்ளார்கள் மக்கள்.

Contact Us