200க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி பாலஸ்தீன ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் !

பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாசுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே எல்லையில் கடும் மோதல் வெடித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இன்று அதிகாலை சுமார் 200க்கு மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளது ஹமாஸ். இதனை அடுத்து சற்று முன்னர் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானப்படை கடும் தாக்குதலை நடத்தியதில் அப்பாவி பொது மக்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் சிறுவர்களும் அடங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை தமது வான் வழி தாக்குதல் வெறும் ஆரம்பம் தான் என்றும். போக போக தெரியும் என்றும்….

இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் எல்லையில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us