மன்னாரில் பாதர் மாருக்கு முதல் ஆப்பு; மூக்குடைந்துபோன டிமேல் GA; சோசை தலைமறைவு! நடந்தது என்ன தெரியுமா?

மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மாஃபியா பங்குத்தந்தைகளின் அட்டுழியத்திற்கு எதிராக முதல் முடிவு எழுதப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம் பங்குத்தந்தைகள் ஜனாதிபதிவரை சென்று வாளி வைத்தும் எந்த பலனுமில்லாமல் விவசாயிகளிடம் தோற்றுப்போய் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விவரிக்கிறது இந்த தொகுப்பு..

மன்னார் மாவட்டத்தில் பாரம்பரியமாக விவசாயிகள் விவசாயம் செய்து வந்த அரசிற்கு சொந்தமான வயல் காணியை தனியார் தொண்டு நிறுவனமொன்றிற்கு வழங்கும் நடவடிக்கைளுக்கெதிராக பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து கடந்த தை மதம் 25-ம் திகதி காலை 9.00 மணியிலிருந்து தை மாதம் 26-ம் திகதி காளை 11.00 மணிவரை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த போராட்டம் 26-ம் திகதி மதியம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த அப்பாவி ஏழை விவசாயிகளின் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஒரு மத ரீதியான வன்முறையாக மாற்றி அதிகாரமிக்க பதவியிலுள்ள மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை ஆகியோர் தாம் நினைத்தை செய்ய முயற்சித்த நிலையில் அதனை தாண்டி வெற்றி பெற்றுள்ளனர் பெரியபண்டிவிரிச்சான் மேற்கு விவசாயிகள்..

இந்நிலையில் தற்போது குறித்த காணிகள் விவசாயிகளுக்குத்தான் வழங்கப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை அறிவித்து பல மாத பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் அலசுகிறது இந்த தொகுப்பு.,

விவசாயிகளின் கருத்திலிருந்து..

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் உள்ள சுமார் 70 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமான வயல் நிலங்களில், இப்பகுதி மக்கள் சுமார் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விவசாயிகள் விவசாயம் செய்துவந்த காலப்பகுதியில் மடு திருத்தல பரிபாலனசபைக்கு பணமாகவோ, நெல் மூட்டைகளாவோ காணிக்கை கொடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அந்தக்காணிகளை தனியார் தொண்டு நிறுவனமொன்றிற்கு வழங்குமாறு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடு பிரதேச செயலகத்தில் கடந்த தை மாதம் இடம்பெற்ற கூட்டமொன்றில் வலியுறுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையிலேயே பூர்வீகமாக இப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள், குறித்த அரச காணிகளை நிரந்தரமாக தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து அந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் கடந்த தை மாதம் 26-ம் திகதி காலை போராட்ட களத்திற்கு ஆளுநரின் பிரதிநிதியாக உதவி வடமாகாண காணியானையாளர் ராஜாமல்லிகை அவர்கள் வருகைதந்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன், விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ளும் கோயில் மோட்டை வயல்காணிகளை பார்வையிட்டதுடன், விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 10 நாட்களுக்குள் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் தொலைபேசி ஊடாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் அவர்கள் அப்போது வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் மாசி மதம் முதலாம் திகதி (திங்கள் கிழமை) வடமாகாண ஆளுநர் அவர்கள் தனது அலுவலகத்தில் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து கோயில் மோட்டை விவசாயிகள் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளையும், அவர்கள் கொண்டு சென்ற ஆதாரங்களையும் பரிசீலித்த ஆளுநர் தொடர்ந்து விவசாயம் செய்வதற்காக இந்த காணிகள் உங்களுக்கு வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார்.

தொடர்ந்து விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக கடந்த மாசி மாதம் முதலாம் திகதி, காலை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசையின் உத்தரவின் பேரில் பெரியபண்டிவிரிச்சான் – கிழக்கிலுள்ள சில கிறிஸ்தவ மக்கள், புனித மரியகொறட்டி தேவாலயத்திலிருந்து குறித்த தேவாலயத்தின் பங்குத்தந்தையின் தலைமையில் மடு-பிரதேச செயலகம் வரை கண்டன பேரணியொன்றை மேற்கொண்டு குறித்த வயல் காணிகளை மடுப்பரிபாலகருக்கு வழங்க வேண்டுமென மடு உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த காணிகள் யாருக்கு என்பதில் விவசாயிகள் தரப்பிற்கும் – மன்னார் மாவட்ட செயலாளர் நந்தினி ஸ்டான்லி டி மெல் மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசைக்கும் இடையில் பல போராட்டங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவர்கள்தான் விக்டர் சோசையிடம் பணம் வாங்கிக்கொண்டு போராட்டம் செய்த மடுவிலுள்ள பிராடுகள்.

ஒரு கட்டத்தில் குறித்த காணிப்பிரச்சினையை தங்களது கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்ட நந்தினி ஸ்டான்லி டி மெல் தனது பொறுப்பை மறந்து அரச அதிகாரங்களை தனக்காக பயன்படுத்திக்கொண்டார், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தனது பிரச்சினையை, தனது வறட்டு கௌரவத்திற்காக தனது நிலையிலன் புனித தன்மையை மறந்து, காணிக்காக போராடிய 27 குடும்பத்தில் ஜந்து குடும்பம் மாத்திரமே இந்துக்கள், மிகுதியுள்ள 22 குடும்பங்களும் கிறிஸ்தவ குடும்பங்கள் என்பதை தெரிந்துகொண்டும் இதனை ஒரு மதப்பிரச்சினையாக மாற்றி ஆதாயம் தேட முயற்சி எடுத்தார்.

ஒரு கட்டத்தில் நந்தினி ஸ்டான்லி டி மெல் மற்றும் விக்டர் சோசையின் அனைத்து முயற்சிகளும் நீதி, நியாயத்திற்கு முன்பு தோல்வியில் போகவே, இறுதியாக வங்காலை என்ற பிரதேச வாதத்தை கையிலெடுத்து சில முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்தான் நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநரை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த கோயில்மோட்டை விவசாயிகளிடம், இனி நீங்கள் தொடர்ந்து அந்த காணிகளில் நீங்கள் விவசாயத்தை மேற்கொள்ளலலாம், உங்களுக்கான உரங்கள் போன்ற சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும், அத்துடன் இன்னும் 10 நாட்களில் உங்களின் பெயரில் குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் வழங்கப்படுமென இறுதி முடிவை ஆளுநர் வழங்கியதாக விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.

Contact Us