வேலிப் பிரச்சனையில் 12 வயதுச் சிறுவன் மீது கொலை வெறித் தாக்குதல்: ஈழத் தமிழ் இனம் எங்கே செல்கிறது ?

12 வயது சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸார் அசமந்தமாக நடந்துகொள்கின்றனர். என தாக்குதலுக்கு இலக்கான சிறுவனின் பெற்றோர் கூறியிருக்கின்றனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. வேலியை சீர் செய்வதற்காக சென்ற சிறுவன் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும்.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டமையால் சத்திர சிகிச்சை கூடத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவிக்கின்றார். சம்பவம் தொடர்பில் 119 எனும் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டும் பொலிசார் விசாரணை மெற்கொள்ள தவறியுள்ளதாகவும், நேற்று காலை 11 மணியளவிலேயே அரம்ப விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் அலட்சியமாக பொலிஸார் செயற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுகின்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் 12 வயதுடைய தர்சிகன் என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பான பூர்வாங்கள விசாரணைகளை மேற்கொண்டு, தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி பெற்று தரவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Contact Us