கைதான இந்தியர்களுக்காக ஒன்றுகூடிய மக்கள்.. முதன் முறையாக பிரிட்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

பிரிட்டனில் viவிசா இல்லாமல் வசிக்கும் இந்திய மக்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று உள்துறை செயலர் பிரீத்தி படேல் முன்னரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் வசித்து வந்த இந்தியர்களான, Lakhvir Singh மற்றும் Sumit Sehdevi இருவரும் விசா உரிமமின்றி 10 வருடங்களாக வாழ்ந்ததாக காவல்துறையினர் திடீரென்று அவர்களின் குடியிருப்பிற்கு சென்று கைது செய்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 200க்கும் அதிகமான மக்கள் அந்த இடத்தில் கூடிவிட்டார்கள். எனினும் அதற்கு முன்பாகவே அவர்கள் இருவரையும் காவல்துறையினர் வேனில் ஏற்றி விட்டார்கள். ஆனால் அங்கு வந்த மக்கள் ஒன்று கூடி வாகனத்தை நகரவிடாமல் சூழ்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் சில பேர் வாகனத்திற்கு அடியில் படுத்துவிட்டார்கள். அவர்கள், கைது செய்த இருவரையும் விட்டுவிடுமாறு காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டு, வாகனத்தை சூழ்ந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். காலை 10 மணியளவில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தாலும் அன்று முழுக்க அவர்களால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.

இதனால் காவல்துறையினர் வேறுவழியின்றி அவர்களை விட்டுவிட்டு சென்றார்கள். அதன்பின்பு அங்கிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் வருவது போன்று, Lakhvir Singh, Sumit Sehdevi இருவரும் கைகூப்பி அங்கிருந்த மக்களுக்கு நன்றி கூறிய படி வாகனத்திலிருந்து இறங்கினார்கள்.

Contact Us