அடுத்தடுத்த இஸ்ரேலின் தாக்குதலால் முள்ளிவாய்க்காளான பாலஸ்தீனம்; நிலையை பாருங்க!

இஸ்ரேல் நள்ளிரவில் திடீரென்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், குடியிருப்பு ஒன்று தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே, பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. ஏனெனில், ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீன மக்கள் தொழுகை நடத்தும் அல் அக்சா மசுதிக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காஸாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது.

சிறிய ரக ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸாவில் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மோதல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஹமாஸ் படை தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான ரொக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி உள்ளது.

அதே சமயம் இஸ்ரேல் ஹமாஸ் படைகள் இருக்கும் இடங்களை குறி வைத்து காஸாவில் தினசரி 100-200 விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இடைவிடாத மோதலில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேலின் திடீர் ஏவுகணை தாக்குதல்களால், மக்கள் எங்கு போய் தப்பிப்பது என்று கூட தெரியாமல் தவித்து வருகின்றனர்.

Contact Us