மகனுக்கு கொரோனா வந்திட கூடாதுன்னு…’ – வாஷிங்டன் சுந்தரின் ‘அப்பா’ செய்துள்ள ‘நெகிழ’ வைக்கும் காரியம்…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதோடு, கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிசிசிஐ ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்தி வைத்தது.

Washington Sunder\'s father staying another house corona

இந்நிலையில் வரும் ஜூன் 18ம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்குகிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் ஹேம்சைர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடர் போன்று, இந்த தொடரிலும் எந்த வித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என பிசிசிஐ பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருப்பதால் கிரிக்கெட் வீரர்கள் நாளை முதல் மும்பை 14 நாட்கள் பபுளில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அதோடு வரும் ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்து புறப்படுகின்றனர்.

ஆஸ்திரேலிய தொடரின் போது வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியத்தால் அவருக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்ததுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் சென்னையில் இருக்கும் தன் வீட்டில் வசித்து வருகிறார். தற்போது சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகாரித்து வருவதால், தன்னால் மகனுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிட கூடாது என அவரின் தந்தை முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தரின் தந்தை வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார். தன் மகன் வீட்டில் இருக்கும் காரணத்தால் சுந்தருக்கு ஏதேனும் கொரோனா பாதிப்பு வந்துவிடக்கூடாது என வேறொரு வீட்டில் தனியாக தங்கி, அங்கிருந்து அலுவலகம் சென்று வருகிறார்.

Contact Us