எல்லாமே துல்லியமா ‘அட்டேக்’ பண்ற அதிநவீன ஆயுதங்கள்…! ‘இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்…!

பல ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக மோதல்கள் நிலவி வருகிறது. தற்போது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு 5 ஆயிரத்து 381 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Joe Biden administration approved sale Weapons Israel

இதில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால், இருத்தரப்பினரும் சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க உள்பட உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது இந்திய மதிப்பில் சுமார் 5 ஆயிரத்து 381 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த ஆயுத விற்பனை குறித்த அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல செய்திநாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆயுத விற்பனை காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று பல தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Contact Us