பிரிட்டனில் சிய-ரலியோன் போர் குற்றவாளி திடீரென கைது: 120,000 பேர் இறந்த ரத்த வைரங்கள் !

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் வைத்து 42 வயதான நபர் ஒருவரை, பொலிசார் திடீரென கைதுசெய்துள்ளார்கள். 1990ம் ஆண்டு தென்னாபிரிக்க சிய-ரலியோனில் போர் குற்றங்களில் அவர் ஈடுபட்டார் என்று பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள். தென்னாபிரிக்காவில் 1990களில் வைரங்களை யார் தோண்டி எடுப்பது என்ற பெரும் போர் வெடித்தது. அன் நாட்டு அரசாங்கம் ஒரு புறம் ராணுவத்தை ஏவி, வைரங்கள் வெட்டி எடுக்கப்படும் சுரங்க குகைகளுக்கு அருகாமையில் வசித்த பல ஆயிரம் பேரை கொலை செய்தது. இது போதாது என்று..

அங்குள்ள ஆயுதக் குழுக்கள் மக்களை அடிமையாக பயன்படுத்தி, வைரங்களை வெட்டி எடுத்து அதனை ஏற்றுமதி செய்து மில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்தது. அந்த வேளையில் 1லட்சத்தி 20,000 ஆயிரம் பொதுமக்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டார்கள். இதில் 14,000 ஆயிரம் சிறுவர்களை படையில் இணைத்தமை தொடர்பாக ஆயுதக் குழுக்கள் பெரும் போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். தற்போது கைதாகி உள்ளவர் முன்னார் ராணுவத்தை சேர்ந்தவர் என்று அதிர்வு இணையம் அறிகிறது.  Source DM: Man, 42, is arrested in Leeds on suspicion of war crimes during Sierra Leone’s 1990s ‘blood diamond’ civil war that left 120,000 dead and involved some 14,000 child soldiers.  A man has been arrested on suspicion of committing war crimes carried out during the civil war in Sierra Leone, police said. The Metropolitan Police said officers from its war crimes team had arrested a 42-year-old man at an address in Leeds on Tuesday on suspicion of offences contrary to section 51 of the International Criminal Court Act 2001.

தென்னாபிரிக்க சிய-ரலியோனில் நடந்த இனப் படுகொலைகளுக்காக ஒரு நபரை பிரிட்டன் பொலிசார் கைது செய்கிறார்கள். ஆனால் கடந்த 2009ல் நடந்த இனப் படுகொலைக்கு எந்த ஒரு சிங்கள நபரையும் பிரித்தானிய பொலிசார் கைதுசெய்யவும் இல்லை. கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் இல்லை என்பது பெரும் வருத்தமான விடையம் தான்.

Contact Us