மாமனார், மாமியார் செய்யுற காரியமா இது?’… ‘இருங்க என் புருஷன் கிட்ட சொல்றேன்’… அழுது கொண்டே கணவனிடம் சொன்ன மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தன்னை நம்பி வந்த பெண்ணை இறுதி வரை வைத்துக் காப்பாற்றுவது தான் ஒரு சிறந்த கணவனுக்கு அழகு. ஆனால் சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியின் உச்சம்.

Husband and his family forces wife into prostitution arrested

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் கல்பனா. 38 வயதான இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் மணிகண்டன் என்ற நபருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாகச் சென்ற திருமண வாழ்க்கையின் பயனாக இருவருக்கும் இரு மகள்கள் பிறந்தனர்.

Husband and his family forces wife into prostitution arrested

இந்த சூழ்நிலையில் திடீரென கல்பனா, மணிகண்டன் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கல்பனா தனியார் விடுதியில் தங்கி, வங்கி ஒன்றில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பேஸ்புக் மூலம்,ஆவடி அண்ணாநகரைச்சேர்ந்த 35 வயதான பிரசன்ன வெங்கடேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

பிரசன்ன வெங்கடேஷ் தனியார் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் நண்பர்களாகப் பேசி வந்த இவர்கள், அதன் பின் அது காதலாக மாற, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன் படி இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

Husband and his family forces wife into prostitution arrested

திருமணம் முடிந்த சில நாட்களில் பிரசன்ன வெங்கடேஷ் தன்னுடைய தாய், தந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு மாமனார், மாமியாரோடு ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று ஒருநாள் பிரசன்ன வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை ஆகியோர் கல்பனாவிடம், வேறொரு ஆண் வீட்டிற்கு வருவார் என்றும் அவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு நிலைகுலைந்து போன கல்பனா, தனது கணவரிடம் இதுகுறித்து கூறுவேன் எனக் கூறியுள்ளார். கணவர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் குறித்து கல்பனா கூற, பிரசன்ன வெங்கடேஷ் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு அவர்கள் சொன்னதில் என்ன தவறு, நீ பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார். கணவன் என நம்பி வந்தவரின் இந்த பதில் கல்பனாவை நொறுங்கிப் போகச் செய்தது.

Husband and his family forces wife into prostitution arrested

உடனே பிரசன்ன வெங்கடேஷ்  இதற்கு நீ மறுத்தால், நாம் இருவரும் தனிமையில் இருக்கும் போது ரகசியமாக எடுத்த ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். கல்பனா இதற்குச் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவரை அடித்து உதைத்ததுடன், அவரிடம் இருந்த 5 பவுன் நகை மற்றும் வங்கிக்கணக்கிலிருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்து மிரட்டி வந்துள்ளனர்.

ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பிய கல்பனா, வெங்கடேஷ் வேலை செய்யும் தனியார் கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதும், அந்த பெண்ணும் அதே நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கல்பனா, அவரைப் பற்றித் தொடர்ந்து விசாரித்த போது, அவர் இது போன்று பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

Husband and his family forces wife into prostitution arrested

உடனடியாக கல்பனா இது குறித்து, ஆவடி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பிரசன்ன வெங்கடேசனின் தந்தை ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதன் பின் அவர்களைப் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Contact Us