லேடி கான்ஸ்டபிளின் காதல் லீலைகள் -காதல் ராணியாக வலம் வந்த சந்தியா ராணி!

தெலங்கானா காவல்துறையில் பணியாற்றி வரும் சந்தியா ராணி என்ற லேடி கான்ஸ்டபிள் காதல் ராணியாக வலம் வந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 30 வயதான சந்தியா ராணி மீது திருமண மோசடியில் ஈடுபட்டதாக சரண் தேஜ் என்ற இளைஞர் ஐதராபாத் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். வேலைத்தேடி ஐதராபாத் வந்தேன் காதல் என்ற பெயரில் என்னை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டார் என கண்ணீர் வடிக்கிறார் சரண் தேஜ்.

ஐதராபாத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் தலைமையகத்தில் சந்தியா ராணி தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கெனவே மூன்று நபர்களுடன் திருமணம் நடந்துள்ளது. இதில் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இரண்டு திருமண உறவு, சட்டப்படி விவாகரத்தில் முடிந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக ஒரு கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவுக்கு 4-வதாக சரண் தேஜ் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது.

வேலைத் தேடி ஹைதராபாத்துக்கு வந்த சரண் தேஜை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் சந்தியா. காதலுக்கு கண் இல்லை என்பதுபோல் சரண் தேஜ் ஆரம்பத்தில் சந்தியா குறித்து எதுவும் தெரியாமல் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் காதலர்களாக உலா வந்துள்ளனர். நாளடைவில் சந்தியாவின் உண்மை முகம் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தியாவிடம் இருந்து விலகி செல்ல நினைத்துள்ளார் சரண் தேஜ். அப்போதுதான் அவருக்கு பிரச்னையே ஆரம்பமானது.

தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என சரண் தேஜை கட்டாயப்படுத்தியுள்ளார். சரண் தேஜ் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி மிரட்டியுள்ளார். திருமணம் செய்துக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றால் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். சரண் தேஜ் சம்மதிக்க மறுத்த நிலையில் தனது சாதியை சுட்டிக்காட்டி பெண்களுக்கு எதிரான பி.சி.ஆர் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து உனது வாழ்க்கையை நாசம் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து வேறு வழியின்றி திருமணத்துக்கு சம்மதித்துள்ளார்.

சந்தியா ராணி விருப்பப்படியே இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் தனி வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளனர். சரண் தேஜ் பார்த்து வந்த வேலையை விடும்படி சந்தியா கூறியுள்ளார். மேலும் தான் சார்ந்த கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்படி சரணை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சரண் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் சரண் தேஜை பூட்டி அறையில் வைத்து போலீஸ் ட்ரீட்மெண்டை காட்டியுள்ளார். இதற்கு மேல் சந்தியாவுடன் குடும்பம் நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்த சரண் வீடியோ பதிவு மூலம் ஜதராபாத் காவல் ஆணையருக்கும், செம்ஷாபாத் காவல் நிலையத்துக்கு வாட்ச் அப்பில் தனது நிலையை எடுத்துக்கூறி புகார் அளித்துள்ளார். சந்தியா ராணியிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு மன்றாடியுள்ளார்.

இதனையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். காவல் ஆணையரின் உத்தரவின் படி சந்தியா ராணியிடம் விசாரணை நடந்து வருகிறது. சந்தியா ராணியின் நடவடிக்கைகள் அவரது பெற்றோருக்கும் தெரிந்துள்ளது. நாங்கள் எவ்வளளோ சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை பணத்துக்காக அவள் இப்படி செய்கிறாள் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். சந்தியா ராணி மீது ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

சந்தியாவை இப்படியே விட்டால் அவள் நிறைய பேரை ஏமாற்றுவாள். அவளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். காவல்துறையில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சரண் தேஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

Contact Us