8 மாசத்துக்கு முன்னாடி நடந்த ‘அந்த’ சம்பவம்…! ‘இதுக்காக தானே இத்தனை நாளா காத்திட்டு இருந்தேன்…’ டாக்ஸி டிரைவர் செய்த ‘வேற லெவல்’ காரியம்…!

பொதுவாக ஒரு போன் காணாமல் போனால் அது கிடைப்பது அரிது. ஆனால் 8 மாதங்களுக்குமுன் காணாமல் போன ஐபோனை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

London driver returned iPhone that went missing 8 months

கடந்த 8 மாதங்களுக்கு முன் லண்டனில் பெண் ஒருவர் வாடகை காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரின் ஐபோனை அங்கேயே தவறுதலாக விட்டு சென்றுள்ளார்.

ஐபோன் ஒன்று தனது காரில் இருந்ததைக் கண்ட ஓட்டுநர், தன்னுடைய தரப்பிலும் பல மாதங்களாக அந்த பெண்ணை குறித்து அறிய முற்பட்டுள்ளார். ஆனால் ஒன்றும் நடந்தாக தெரியவில்லை. அந்த பெண்ணும் தொலைந்து இத்தனை மாதங்கள் ஆகிவிட்டதே, இனி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று இருந்துள்ளார்.

அதன்பின் 8 மாதங்களுக்கு பின் தன் வண்டியில் ஐபோனை தவறவிட்ட அந்த பெண் மீண்டும் தனது காரில் தற்செயலாக பயண செய்ய முன்பதிவு செய்ததைக் கண்டு மகிழ்ந்துள்ளார் அந்த ஓட்டுநர்.

அந்த பெண்ணை மட்டுமல்லாது அனைவரையும் இந்த சம்பவம் ஆச்சரியப்படவைத்துள்ளது எனலாம். மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படாமல் அந்த ஓட்டுநர் செய்த காரியத்தால், வாகன ஓட்டுநரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Contact Us