ஹரோ மற்றும் ஈலிங் ஆகிய தமிழர் வசிக்கும் பகுதிகளில் இந்திய கொரோனா பரவியது !

பிரித்தானியாவில் ஈழத் தமிழர்கள் அதிகம் வசிக்கும், ஹரோ ஈலிங் போன்ற பகுதிகளில், இந்திய கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார சேவை அறிவித்துள்ளது. இதனை அடுத்து நடமாடும் பரிசோதனைக் கூடங்களை இந்தப் பகுதிகளில் அதிகரிக்கவும். மற்றும் வாரம் 2 தடவை கொரோனா செக் அப் செய்யவும் ஏற்பாடுகளை அரசு முடுக்கி விட்டுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்தியாவில் இருந்து அவசரமாக திரும்பி வந்த பல குஜராத் சமூகத்தினர் ஊடாகவே ஹரோவில் இந்திய கொரோனா பரவி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் அரசு இந்தியாவுக்கான விமான தடையை அறிவிக்க முன்னர் சில நாட்கள் அவகாசம் கொடுத்தது. இன் நிலையில் பல இந்தியர்கள் உடனே இந்தியாவில் இருந்து லண்டன் வந்தடைந்து விட்டார்கள். இவ்வாறு ஒரு சில நாட்களில் மட்டும் 8,000 ஆயிரம் பேர் இது போன்று ஹீத் ரூ விமான நிலையம் ஊடாக வந்துள்ளதாக மேலும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

Contact Us