Driver க்கு ஒற்றை விரலை காட்டிய அம்மா: 6 வயதுச் சிறுவன் கடைசியாக சொன்ன வசனம் …

தனது 6 வயதுச் சிறுவனை காரில், பள்ளிக்கூடம் கூட்டிக் கொண்டு சென்றுள்ளார் அம்மா. தனது காரை திடீரென முறையற்ற விதத்தில் முந்திய வெள்ளை நிற கார் ஓட்டுனரை பார்த்து, குறித்த அம்மா ஒற்றை விரலைக் காட்டியுள்ளார். இதனால் கடுப்பான அந்த ஓட்டுனர், திடீரென பின் புறமாக வந்து துப்பாக்கியால் ஒரு தடவை டிக்கியில் சுட்டுள்ளார். ஆனால் அந்தக் குண்டு அப்படியே துளைத்துக் கொண்டு சென்று, பின் இருக்கையில் இருந்த 6 வயதுச் சிறுவனின் பின் முதுகில் பட்டுள்ளது. அம்மா எனக்கு வயிற்றில் வலி எடுக்கிறது என்று கூறிக் கொண்டு அந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளான்.

அவசரமாக விரைந்து வந்த மருத்துவப் பிரிவினர் எவ்வளவோ போராடியும் 6 வயதுச் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. ஏய்டன் லியோஸ் என்ற இந்தச் சிறுவனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று, சிறுவனின் தாயாரின் தங்கை கண்ணீரோடு கூறிய வார்த்தைகள் தற்போது அமெரிக்காவையே உலுப்பியுள்ளது. பொலிசார் குறித்த நெடுஞ்சாலையை முற்றாக முடக்கி, பெரும் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

Contact Us