இன்னும் மீதி இருப்பது கோவை சரளாவும் கமலும் தான்: கட்சி ஆபிசில் சதி லீலாவதி தொடர்பாக பேசலாம் !

அடுத்த விக்கெட்டும் காலியா இன்னும் மீதி இருப்பது கோவை சரளாவும் கமலும் தான் ரெண்டு பேரும் கட்சி ஆபிசுக்கு போய் சதிலீலாவதி படம் பார்க்க வேண்டியதுதான் என கலாய்த்துள்ளார் நெட்டிசன்கள். காரணம் ஸ்ரீப்பிரியா போட்ட ஒரு ரிவீட் தான். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நடிகை ஸ்ரீபிரியா பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக்கி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகிய வண்ணம் உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அனைத்து இடங்களிலும் தால்வியை தழுவிய விடையம் யாவரும் அறிந்ததே.

கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் கமலின் தன்னிச்சையான முடிவுகளும் சர்வாதிகார போக்குமே தோல்விக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை ஸ்ரீபிரியா பதிவிட்டுள்ள டிவிட் நெட்சன்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, நடிகை ஸ்ரீபிரியா, நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று… என பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீபிரியாவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா வரவேண்டிய நடிகர்-அவரை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று பாலச்சந்தரிடம் சொன்ன ஒரே நடிகை நீங்கதான். (இதை பாலசந்தர் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்) ஸ்ரீப்ரியா என்ற பெயரை பார்த்தாலே எனக்கு இதுதான் ஞாபகம் வரும். ஆமாம் நீங்க சொன்ன ஸ்டேட்மென்ட் யாருக்காக? என கேட்டுள்ளார். போறபோக்கில் பார்த்தால் ஸ்ரீப்பிரியாவும் விலகி விடுவார் போல இருக்கே ? இன் நிலையில் கோவை சரளா தான் கட்சியில் மிஞ்சுவார் போல இருக்கிறது.

Contact Us