குழந்தை பிறந்த தினத்திலேயே தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

கொரோனா பாதிக்கப்பட்டு சுபாஷ் இறந்த சில மணி நேரத்திலேயே அவரது மனைவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனால் சுபாசின் மனைவி தனக்கு குழந்தை பிறந்திருந்தாலும், கணவர் இறந்து விட்டதால் வேதனையில் துடிதுடித்தார்.

கலபுரகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்தவர் சுபாஷ் தாவரகோட்டே (வயது 32). இவருக்கு திருமணமாகி விட்டது. சுபாசின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இதற்கிடையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுபாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அப்சல்புராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 வாரங்களாக மருத்துவமனையிலேயே சுபாஷ் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் சுபாசின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுபாசுக்கு திடீரென்று மூச்சு திணறல் உண்டானதால், அவர் பரிதாபமாக இறந்து விட்டார். சுபாஷ் இறந்த சில மணி நேரத்திலேயே அவரது மனைவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனால் சுபாசின் மனைவி தனக்கு குழந்தை பிறந்திருந்தாலும், கணவர் இறந்து விட்டதால் வேதனையில் துடிதுடித்தார். இந்த சம்பவம் அப்சல்புராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us