அப்பாவை தவறாக பேசிய எச் ராஜா.. பளார் என பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனின் தந்தையும் காவல் அதிகாரியுமான தாஸ் என்பவரை பற்றிய செய்திகள் அளவுக்கு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் இறந்தது இயற்கை மரணம் அல்ல எனவும், அவரை கொலை செய்து விட்டனர் எனவும் பிரபல பாஜக நிர்வாகி எச் ராஜா சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் என்பவரை கொன்றவர் தற்போது பாபநாசம் தொகுதியின் எம்எல்ஏ எனவும் பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் அதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கிவிட்டனர். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதைப்போல தேவையில்லாமல் வாய்விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் எச் ராஜா. இது ஒரு புறமிருக்க சிவகார்த்திகேயன் தன்னுடைய தந்தையின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த அறக்கட்டளையில் இருந்து சுமார் ஒரு லட்சம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கொடுத்துள்ளார்.

எப்போதுமே தன்னுடைய பெயரில் செக் கொடுக்கும் சிவகார்த்திகேயன், எச் ராஜா பேசிய பிறகு அவருடைய தந்தை பெயரில் நடத்தும் அறக்கட்டளை மூலம் செக் கொடுத்தது மறைமுகமாக எச் ராஜாவுக்கு பதிலடி கொடுப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Contact Us