எனது மகனின் மூக்கை, பல்லை நெற்றியை உடைத்துள்ளார்கள்: கதறும் அப்பா- பெலருஸ் நாட்டின் கடத்தல் …

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கிரீஸ் நாட்டில் இருந்து லித்வேனியா சென்ற ரயன் ஏர் விமானத்தை, தனது நாட்டு மிக் 29 ரக போர் விமானம் கொண்டு தரை இறக்கிய பெலருஸ் அரசு, அதில் பயணித்த ஊகவியலாளர் றோமனை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்தார்கள். அவரை அடித்து சித்திரவதை செய்து. தற்போது தேசிய தொலைக்காட்சி முன்னர் அவரை நிறுத்தியுள்ளார்கள். றோமன் தான் தனது இணையத்தில் பெலரூஸ் நாட்டைப் பற்றி எழுதியது அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார். தாம் மன்னிப்பு கேட்ப்பதாகவும் கூறியுள்ளார். அவரது நெற்றியில் கடும் காயங்கள் இருப்பதை அவதானிக்க முடிகிறது…மேலும்

அவர் அணிந்திருக்கும் உடை கழுத்தை முற்றாக மறைப்பதோடு, கைகளையும் மறைக்கிறது. அவர் TVல் பேசும் போது ஒரு பல்லைக் காணவில்லை. மேலும் அவரது மூக்கை உடைத்துள்ளது பெலருஸ் ராணுவம் என்று றோமனின் அப்பா கதறி அழுதுள்ளார். கடந்த 27 வருடமாக பெலருஸ் நாட்டை, அலக்ஸாண்டர் லூஷினேகோ என்பவர் ஆட்சி புரிந்து வருகிறார். தற்போது பல நாடுகளின் கவனம் பெலருஸ் நாடு மீதி திரும்பியுள்ளது. பெலருஸ் நாட்டின் மீது தமது நாட்டு விமானங்கள் பறக்க பல நாடுகள் தடை போட்டுள்ளது. அமெரிக்கா பிரித்தானியா உட்பட பல நாடுகள் பெலருஸ் நாட்டின் மீது பல தடைகளை போட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

ரஷ்ய அதிபர் புட்டின் ஆதரவில் தான் பெலருஸ் நாடு முற்று முழுதாக இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

Contact Us