அமெரிக்காவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பசில்; பெரும் சிக்கலில் ராஜபக்சக்கள்?

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து அந்த நாட்டிற்கு பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பஸில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபயவின் பாரியார் அனோமா ராஜபக்ச இருவரும் நாடு திரும்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவருமே அமெரிக்கப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்பதனாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பயணத்தடையை அடுத்து பஸில் ராஜபக்ச, தினமும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தர்களுடன் இணையவழி கலந்துரையாடலை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக விதித்திருக்கின்ற 4ஆம் கட்ட பயணத்தடையானது சொற்ப நாட்களில் மாற்றம் பெறலாம் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது.

Contact Us