ஹோட்டல் ‘ரூம்’ எப்படி இருக்கு..? வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய வாசிங்டன் சுந்தர்..!

மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டல் அறை எப்படி உள்ளது என வாஷிங்டன் சுந்தர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Washington Sundar shares video of his messy room

இங்கிலாந்து நாட்டில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை, சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. மேலும் இந்த அணியே அடுத்து நடைபெற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Washington Sundar shares video of his messy room

வரும் ஜூன் 2-ம் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அதற்கு முன்னதாகவே மும்பையில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு  சுப்மன் கில், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ரிஷாப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா என பலரும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டது.

Washington Sundar shares video of his messy room

இந்த நிலையில் ஹோட்டலில் தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டல் அறை எப்படி உள்ளது என தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். அந்த தொடரில் 84 ரன்களும் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதனை அடுத்து இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு அரைசதங்களை( 85, 96) அடித்து அசத்தினார்.

Contact Us