கணவரை கொல்ல வீட்டிற்கு தீ வைத்த பெண்!”.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் இருக்கும் Zofingen என்ற பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தினரின் வீட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் சிறிய காயங்கள்கூட இல்லாமல் தப்பி விட்டார்.

ஆனால் அவரின் கணவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த போது, அந்த பெண்ணின் மீது சந்தேகமடைந்துள்ளனர். இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

அதில் அந்தப் பெண் பல தடவை தன் கணவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அனைத்து முறையும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இது மட்டுமில்லாமல் தன் வீட்டை தீ வைத்து எரிக்க ஒரு நபரை ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்திருக்கிறது.

இதற்கிடையில் அந்த பெண் தன் கணவரை கொலை செய்ய, பொருளாதார நெருக்கடி தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். எனினும் அனைத்து தகவல்களும் அந்த பெண்ணிற்கு எதிராகவே இருந்துள்ளது. எனவே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில், அந்த பெண் பல மோசடிகள் செய்ததும், ஆவணங்களில் முறைகேடு செய்து வந்ததும் தெரியவந்திருக்கிறது. எனவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கான தீர்ப்பு விரைவில் வழங்கப்படவுள்ளது.

Contact Us