மற்றொரு தனியார் பள்ளி ‘ஆசிரியர்’ மீது பாலியல் புகார்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

சென்னையில் மற்றொரு தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sexual harassment by teacher at another school in Chennai

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் மற்றொரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sexual harassment by teacher at another school in Chennai

சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளி ஆசிரியர் ஆனந்த்-க்கு எதிராக முன்னாள் மாணவிகள் பலரும் பாலியல் புகார்களை, குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Sexual harassment by teacher at another school in Chennai

இதன் அடிப்படையில் ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடக்கும் வகையில் குழு அமைக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Contact Us