போலி அடையாள அட்டையை காட்டி நடிகை மீரா சோப்ரா செய்த மோசடி!

தானேயில் பார்பிக் பிளாசாவில் உள்ள தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் மாநகராட்சி கொரோனா தடுப்பூசி மையத்தில் நடிகை மீரா சோப்ரா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்த தகவல்களையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் அவர் போலி அடையாள அட்டையை காண்பித்து முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து தானே மாநகராட்சி துணை கமிஷனர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Contact Us