நாங்களும் மொதல்ல அத ‘நாய்’னு தான் நெனச்சோம்…! ‘அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சுது…’

லண்டனில் நட்டாஷா பிரயாக் மற்றும் அவரின் கணவர் ஆடம் இருவரும் தங்கள் வீட்டின் வாசலில் இருந்த காரில் இருக்கும் பொருளை எடுக்க சென்ற போது ஒரு விபரீத சம்பவம் நடந்துள்ளது.

the fox was in inside the washing machine in london

காரில் இருக்கும் பொருளை எடுத்துக்கொண்டு வரும் போது, வீட்டின் லிவிங் ரூமில் நாய் போன்ற ஒரு உருவம் இருந்துள்ளது. அதை விரட்டிக்கொண்டு சென்ற  அடமின் கண்ணில் இருந்து மறைந்து ஓடியுள்ளது அந்த நரி. அதன் பின் நடந்த சம்பவம் தான் இங்க ஹைலைட்.

இதுகுறித்து நட்டாஷா பிரயாக் டிவிட்டர் பக்கத்திலேயே குறிப்பிடுள்ளார். அதில், ‘நானும் என் கணவர் ஆடமும் வீட்டை பூட்டாமல் வெளியே காரை நோக்கி வந்தோம். அப்போது, லிவ்விங் ஏரியாவில் நரி இருப்பதை பார்த்த என்னுடைய கணவர், முதலில் அதை நாய் என்று எண்ணி வேகமாக ஓடி துரத்தினார்.

தீடீரென மறைந்த அந்த உருவம், சிறிது நேரத்தில் அது நாய் இல்லை நரி என்பதை உணர்ந்த நாங்கள், அதனை வெளியே அனுப்ப விரட்டினோம். ஆனால் அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதன்பின் ஏதாவது உணவு கொடுக்கலாம் என திட்டமிட்டு, அதன் கண்களுக்கு தெரியும்படி உணவுப் பொருட்களை வைத்தோம். பசியாக இருந்திருக்கும் போல, உடனடியாக வாஷிங்மெஷினுக்குள் இருந்து வந்த நரி உணவை சாப்பிட்டுவிட்டு, எந்தவித பதட்டமும் இல்லாமல் வெளியே சென்றது’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

Contact Us