கணவரை பிரிந்த பள்ளி ஆசிரியை 12-ம் வகுப்பு மாணவனுடன் மாயம்… அதிர்ச்சி சம்பவம்!

ஆசிரியைக்கும் மாணவனுக்கு இருக்கும் உறவு என்பது புனிதமானது. ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறினால் சமூதாயத்தில் தூய்மையான சேவை செய்யும் மற்ற ஆசிரியைகளின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகிறது.

ஹரியானாவின் பானிபட் நகரில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் ஆசிரியை மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவன் காணமல் போன அதே நேரத்தில் ஆசிரியை மாயமனதால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக அந்த பெண் தனது மகனுக்கு அவரது வீட்டில் 4 மணி நேரம் பாடம் தொடர்பாக பயிற்சி அளித்து வந்துள்ளதாக பெற்றோர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களின் தகவலின்படி, அவர்களது 17 வயதான மகன் தேஸ்ராஜ் காலனியில் அமைந்துள்ள அவரது ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆசிரியை மாணவருக்கு தினமும் 4 மணி நேரம் கற்பிப்பார். ஆனால் அன்று மாணவர் மாலை வரை வீட்டிற்கு வராததால் அவர்கள் ஆசிரியை குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளனர்.

கணவரை பிரிந்து வாழும் அந்த ஆசிரியை பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மாணவரின் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது அவர்கள் ஆரம்பத்தில் ஆசிரியை காணமால் போனதை கூறவில்லை. ஆனால் போலீஸாரிடம் மாணவன் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து ஆசிரியையும் மாயமானது தெரியவந்துள்ளது.

மேலும் மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகள் என எதுவும் எடுத்து செல்லவில்லை. போலீசாரின் விசாரணையில் அவர்கள் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருக்கும் இடம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Contact Us